Monday, December 14, 2009

சோக்கா சொன்னய்யா!! அப்டியே வரதில்ல!!

குமரி கோட்டம் திரைப்படம்: எம். ஜி. ஆர். காலை நாளிதழ் போடும் காட்சி:  - சோ தூங்கி கொண்டு இருக்கிறார். எம். ஜி. ஆர். அவர் மீது பேப்பர் போட, தூக்கம் கலைந்த சோ, எழுந்து வந்து வாக்குவாதம் செய்கிறார். இந்த காட்சியில் ஒரு வசன பரிமாற்றம்:
எம். ஜி. ஆர்.: தூக்கம் மனிதனுடைய எதிரி ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க, தெரியுமா?
சோ: எதிரியையும் நேசிக்கனும்னு அதே பெரியவங்க சொல்லி இருக்காங்க, உனக்கு தெரியுமா??

இதே மாதிரி, நீங்கள் ரசித்த சுவாரசியமான துணுக்குகள் இருக்கிறதா?



Friday, September 18, 2009

டெல்லி கணேஷ் - பேசப்படாத நவரச நாயகன்

'நவரச நாயகன்' என்ற பட்டத்திற்கு திரு. கமல் ஹாசன் மிகவும் பொருத்தமானவர் என்றாலும், என்னை பொறுத்தவரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும் இன்னொரு நாவரச நாயகனே! கமல் அவர்களுக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற நிலையில், கணேஷ் அவர்கள் அதிகம் பேசப்படாதது எனக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை .

சிம்லா ஸ்பெஷல் ஆரம்பித்து, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், சிந்து பைரவி, அவ்வை ஷண்முகி என மிகப்பெரிய வெற்றி படங்கள் ஆகட்டும், எதிரி, ஆஹா, 'விஎத்னம் கோலோனி', தமிழன் என சிறிய படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் வரை, கணேஷ் அவர்களின் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களை கண்டு ரசித்து இருக்கிறேன். எந்த படமாக இருந்தாலும் நான் அந்த கதாபாத்திரத்தில் லயித்து போய் இருக்கிறேனே தவிர, அங்கு கணேஷ் அவர்களை தனித்து கண்டது இல்லை. அந்த அளவுக்கு அவர் திறமை மிக்கவர்.

எனக்கு பொதுவாக ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டு பார்ப்பது பிடிக்காத ஒரு விஷயம். ஆனாலும், சில சமயங்களில் இந்த ஒப்பீடு, சொல்ல வந்த கருத்தை எளிமையாக புரிய வைக்க உதவுமானால், அது தவறு இல்லை என்பது என்னுடைய சமாதானம். ரகுவரன் அவர்கள் என்றதும் உடனே நம் நினைக்கு வருவது அவருடைய அந்த மாறுபட்ட வசன உச்சரிப்பு தான், பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ஒரு தனி பாணி, என்று பெரும்பாலான திறமையான நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு பாணியிலேயே திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதனாலேயே கூட அவர்களுக்கு, கணேஷ் அவர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் கிடைத்து இருக்கலாம்.